< Back
முன்னோட்டம்
பான் இந்தியா படத்தில் யோகி பாபு
முன்னோட்டம்

'பான் இந்தியா' படத்தில் யோகி பாபு

தினத்தந்தி
|
17 Jun 2022 10:31 AM IST

‘பான் இந்தியா’ படத்தில் இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்க, கதை நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.

நகைச்சுவை நடிகராகவும், கதைநாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, முதல்முறையாக 'பான் இந்தியா' படத்தில் நடிக்கிறார். 'வீரப்பனின் கஜானா' என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இந்தப் படம், தற்போது 'கஜானா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்க, கதை நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில், இந்தப் படத்தில் சாகச காட்சிகள் இடம் பெறுகின்றன. மாய மந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்கள் தொடர்பான காட்சிகளும் உள்ளன.

வேதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் அவர் துணிச்சலாக நடித்துள்ளார். அந்த காட்சிகள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதுடன், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மீனாட்சி தீக்சித், பிரதாப்போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் டைரக்டு செய்கிறார்.

மேலும் செய்திகள்