மீண்டும் தொடங்கிய விக்ரம் படம்
|கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள `துருவ நட்சத்திரம்' பட வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம்பெற்ற முதல் பாடலான `ஒரு மனம்' ஏற்கனவே வெளியான நிலையில் `ஹிஸ் நேம் இஸ் ஜான்' என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
பாடலை பால் டப்பா எழுதி உள்ளார். ஒரு ஊரிலொரு பிலிம் ஹவுசுடன் இணைந்து ஒன்ட்ராகவா எண்டர்டெயின்மெயின்ட் தயாரித்துள்ளது. இதில் விக்ரமுடன் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, மாயா எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, எஸ்.ஆர்.கதிர், விஷ்ணுதேவ். வித்தியாசமான ஸ்டைலான அதிரடி சண்டை படமாக தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.