துப்பறிவாளராக விஜய் ஆண்டனி
|`விடியும் முன்' படத்தை இயக்கி பிரபலமான பாலாஜி கே.குமார் டைரக்டு செய்துள்ள புதிய படம் 'கொலை'. இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராகிறது.
படம் குறித்து டைரக்டர் பாலாஜி கே.குமார் கூறும்போது, ''ஒரு நடிகை கொலை செய்யப்படுகிறார். கொலையாளி, கொலைக்கான காரணங்களை துப்பறிவாளராக வரும் விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை.பெரிய அடுக்குமாடி குடியிருப்பு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். இதில் விஜய் ஆண்டனி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வருகிறார்.
படத்தில் சிவாஜி கணேசனின் 'புதிய பறவை' படத்தில் பி.சுசீலா பாடிய 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலை ஸ்ரேயா கோஷல் பாட ரீமிக்ஸ் செய்துள்ளோம். படத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் வெளிநாட்டில் ஒரு ஆண்டுக்கு மேல் நடந்துள்ளது'' என்றார்.
ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன். இசை: கிரிஷ் கோபால கிருஷ்ணன்.