< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
கதாநாயகனாக வசந்த் ரவி
|21 July 2023 9:49 AM IST
நடிகர்: வசந்த் ரவி நடிகை: மெஹ்ரின் பிரசன்டா டைரக்ஷன்: சபரீஷ் நந்தா இசை: அஜ்மல் தசீன் ஒளிப்பதிவு : பிரபாகரன் ராகவன்
நயன்தாரா நடிப்பில் வெளியான `ஐரா', `நவரசா' போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, டைரக்டராக அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்பான் மாலிக் இணைந்து தயாரிக்கிறார்கள்.
`தரமணி', `ராக்கி', `அஸ்வின்ஸ்' போன்ற படங்களில் நடித்து பிரபலமான வசந்த் ரவி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். இவர் தனுசின் `பட்டாஸ்' படத்தில் நடித்து இருந்தார். `விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்துள்ள அனிகா சுரேந்திரன், முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற `புஷ்பா' படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை: அஜ்மல் தசீன், ஒளிப்பதிவு: பிரபாகரன் ராகவன்.