< Back
முன்னோட்டம்
பேய் படத்தில் உண்மை சம்பவம்
முன்னோட்டம்

பேய் படத்தில் உண்மை சம்பவம்

தினத்தந்தி
|
25 Aug 2023 8:42 AM IST
நடிகர்: சச்சின்,கும்கி அஸ்வின், நடிகை: அபர்ணதி,சுருதி பெரியசாமி, ரவீனா தாஹா இசை: ரோனி ரபேல் ஒளிப்பதிவு : ஆர்.எஸ். ஆனந்த குமார்.

வசந்த பாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் டைரக்டு செய்துள்ள படம் `டீமன்'. இதில் நாயகனாக சச்சின், நாயகியாக அபர்ணதி ஆகியோர் நடித்துள்ளனர். கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி, ரவீனா தாஹா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி ரமேஷ் பழனிவேல் கூறும்போது, ``சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் சொகுசு குடியிருப்பில் பத்துபேர் தற்கொலை செய்து கொண்டனர். பேய் மற்றும் அமானுஷ்ய விஷயங்களில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையே தற் கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பேய் படமாக `டீமன்' தயாராகி உள்ளது. நமது கலாசாரத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைத்துள்ளேன். நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் கதை. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் கொடுக்கும். ரசிகர்கள் பேய் படங்களை விரும்புகிறார்கள். அதனாலேயே இந்தப் படத்தை இயக்கி உள்ளேன்'' என்றார். இசை: ரோனி ரபேல், ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார்.

மேலும் செய்திகள்