< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
இன்றைய தலைமுறை காதல் கதை
|23 Jun 2023 12:17 PM IST
அருள்நிதி நடித்த `தேஜாவு' படத்தை இயக்கி பிரபலமான அரவிந்த் ஶ்ரீனிவாசன் டைரக்டு செய்யும் புதிய படத்துக்கு `தருணம்' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதில் `முதலும் நீ முடிவும் நீ' படத்தில் அறிமுகமான கிஷண் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
படம் பற்றி அரவிந்த் ஶ்ரீனிவாசன் கூறும்போது, ``பல காதல் படங்கள் வந்துள்ளன. அவற்றில் இது வித்தியாசமான கதையம்சம் கொண்ட காதல் படமாக இருக்கும். இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது. படத்தில் 4 பாடல்கள் உள்ளன'' என்றார். படத்தை ஷென் ஸ்டுடியோ சார்பில் புகழ் தயாரிக்கிறார். இசை: தர்புகா சிவா, ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்யாஜி