< Back
முன்னோட்டம்
கிரிக்கெட் விளையாட்டு கதையில் திரில்லர்
முன்னோட்டம்

கிரிக்கெட் விளையாட்டு கதையில் திரில்லர்

தினத்தந்தி
|
28 July 2023 2:00 PM IST
நடிகர்: டாக்டர் ஸ்ரீனி சவுந்தரராஜன் நடிகை: நிமிஷா  டைரக்ஷன்: டாக்டர் ஸ்ரீனி சவுந்தரராஜன் இசை: ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் ஒளிப்பதிவு : ஷியாம் ராஜ்

``மகன் என்ஜினீயராக வேண்டும் என்று தந்தையும், டாக்டராக வேண்டும் என்று தாயும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். ஆனால் திடீரென கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. தந்தை வேண்டாம் என்று தடுக்கிறார். தான் ஒரு கொலை குற்றவாளி என்ற மன உளைச்சலும் அவருக்கு வருகிறது. அதன் பின்னணியை ஆராயும் சுவாரசியமான கதைக்களத்துடன் சஸ்பென்ஸ் திரில்லருடன் தயாராகும் படம், கபில் ரிட்டர்ன்ஸ்'' என்றார், படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் டாக்டர் ஸ்ரீனி சவுந்தரராஜன். இவரே படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக நிமிஷா நடிக்கிறார். இவருடன் பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத்,சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: ஷியாம் ராஜ், இசை: ஆர்.எஸ்.பிரதாப் ராஜ். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

மேலும் செய்திகள்