மருத்துவ 'மாபியா'க்கள் கதை
|கவுஷிக், யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'பஜனை ஆரம்பம்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை ஆனந்த் தட்சிணா மூர்த்தி எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து அவர் கூறும்போது, ''இந்தப் படத்தின் போஸ்டரில் 10 பெண்களுக்கு ஒருவர் தாலி கட்டுவது போல் தோற்றம் உள்ளது. ஜப்பானில் அப்படி ஒருவர் ஒரே ஆண்டில் 10 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களைத் தாயாக்கி இருக்கிறார். இது ஒரு திருமண சாதனையாக பேசப்படுகிறது. அதைக் கேள்விப்படும் கதாநாயகன் நாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து கனவு காண்பதாக வரும் காட்சியில்தான் இப்படி வருகிறது. மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக காட்டவில்லை. இது ஆபாச படம் அல்ல. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்லும்படம். மருத்துவ மாபியாக்கள் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது'' என்றார். ஒளிப்பதிவு: பி.இளங்கோவன், இசை: விஜய் பிரபு இந்தப் படத்தை ஶ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் சார்பில் எஸ்.தோதாத்ரி சந்தானம் தயாரிக்கிறார்.