< Back
முன்னோட்டம்
மிஸ்கின் உதவியாளர் படத்தில் தான்யா
முன்னோட்டம்

மிஸ்கின் உதவியாளர் படத்தில் தான்யா

தினத்தந்தி
|
23 Jun 2023 12:37 PM IST

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் படத்துக்கு `பிபி 180' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பாக்ரயாஜ், டேனியல் பாலாஜி, தமிழ், அருள்தாஸ், ஜெயக்குமார், ஜேக் அருணாச்சலம், நயனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தை மிஸ்கின் உதவியாளர் ஜேபி டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``நான் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய `சித்திரம் பேசுதடி', `அஞ்சாதே' படங்களில் நடித்து இருக்கிறேன். `அஞ்சாதே' படத்தில் கடைசிவரை என் முகத்தையே காட்டாத மொட்டைத்தலை ஆசாமியாக நடித்து இருந்தேன்.

பின்னர் படம் இயக்க முடிவு செய்து `பிபி 180' படத்தை டைரக்டு செய்துள்ளேன். ரத்த அழுத்தம் 180-ஐ தாண்டினால் `சைலண்டு கில்லர்' என்பார்கள். அதுபோன்ற மெடிக்கல் திரில்லர் கதையம்சத்தில் படம் உருவாகிறது'' என்றார்.

இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: ராமலிங்கம்.

மேலும் செய்திகள்