< Back
முன்னோட்டம்
விஷ்ணு விஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்-வாணி போஜன்
முன்னோட்டம்

விஷ்ணு விஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்-வாணி போஜன்

தினத்தந்தி
|
9 Sept 2022 8:31 AM IST
நடிகர்: விஷ்ணு விஷால் நடிகை: ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன்  டைரக்ஷன்: பிரவீன் கே இசை: சாம் C.S. ஒளிப்பதிவு : விஷ்ணு சுபாஷ்

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

'ராட்சசன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தும் ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறார், விஷ்ணு விஷால். அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ஆர்யன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, குற்றப்பின்னணியிலான திகில் படம். பரபரப்பான திரைக்கதை.

விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக், ஜார்ஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பிரவீன் கே டைரக்டு செய்கிறார். படம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வளர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்