< Back
முன்னோட்டம்
ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்!
முன்னோட்டம்

ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்!

தினத்தந்தி
|
27 March 2023 1:27 PM IST
நடிகர்: ராம் சரண், கியாரா அத்வானி ,அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த்,  டைரக்ஷன்: ஷங்கர் இசை: தமன் ஒளிப்பதிவு : எஸ் திருநாவுக்கரசு

ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது

ராம்சரண் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பெயர் கேம் சேஞ்சர். ராம் சரண் பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசியல் திரில்லர் படமான இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகி. அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதை வசனம் கார்த்திக் சுப்பராஜ், இணை தயாரிப்பாளர் ஹர்ஷித், ஒளிப்பதிவு எஸ் திருநாவுக்கரசு, இசை தமன்



மேலும் செய்திகள்