`சூப்பர் மேன்' கதையில் நடிக்கும் சத்யராஜ்
|சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ள படம் `வெப்பன்'. இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகிறது. சஸ்பென்சும் இருக்கும். யாராலும் அழிக்க முடியாத சூப்பர் மேன் சக்தி கொண்ட மனித ஆயுதமாக சத்யராஜ் வருகிறார்.
சத்யராஜூக்கு சூப்பர் பவர் எப்படி கிடைத்தது? என்பதை விளக்க பிளாஷ்பேக் காட்சியொன்றை வைத்துள்ளோம். இந்தக் காட்சியில் `ஏ.ஐ' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் சத்யராஜை இளமையான தோற்றத்தில் உருவாக்கினோம். இந்திய திரையுலகில் `ஏ.ஐ' தொழில்நுட்பத்தின் மூலம் கிராபிக் காட்சிகள் இந்தப் படத்தில் தான் முதல் முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.
நம்முடைய கலாசாரத்திற்கு ஏற்ப சூப்பர் மேனாக சத்யராஜ் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன். எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத மனித ஆயுதம். அவர் அப்படி மாறியது எப்படி? என்ற ரீதியில் கதை பயணிக்கும். யூடியூபர் வேடத்தில் வசந்த் ரவி வருகிறார். இசை: ஜிப்ரான், ஒளிப்பதிவு: பிரபு ராகவ்.