< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன்
|25 Aug 2023 7:46 AM IST
நடிகர்: நிகில் நடிகை: சம்யுக்தா மேனன் டைரக்ஷன்: பரத் கிருஷ்ணமாச்சாரி இசை: ரவி பஸ்ரூர் ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா
`கார்த்திகேயா 2' படம் மூலம் பிரபல கதாநாயகனாக உயர்ந்த நிகில் தனது 20-வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி டைரக்டு செய்கிறார். படத்துக்கு `சுயம்பு' என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் தலைப்பையும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
நிகில் மூர்க்கமான போர் வீரனாக குதிரையில் சவாரி செய்து ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போன்ற அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது. இது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். தாகூர் மது வழங்க பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன், ஶ்ரீகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, இசை: ரவி பஸ்ரூர்.