< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ரெயில் மோதி ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பலி
|5 July 2023 12:40 AM IST
ரெயில் மோதி ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பலியானார்
அரக்கோணம்
ரெயில் மோதி ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பலியானார்
அரக்ேகாணத்தை அடுத்த திருத்தணி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சுப்பாராகவலு (வயது 60) என்பதும் உறவினர் வீட்டுக்கு வந்து, அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு செல்ல ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.