திரில்லர் கதையில் ரகுமான், பரத்
|ரகுமான், பரத் ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு `சமரா' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்தில் ஜார்ஜ், சோனாலி குடன், டினிஜ் வில்யா, ஶ்ரீலா லட்சுமி, சினு சித்தார்த், சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சார்லஸ் ஜோசப் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``குடும்ப உறவுகளுடன் அறிவியல் கலந்த பரபரப்பான திரில்லர் படமாக உருவாகி உள்ளது. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்படும். பரத், ரகுமான் இணைந்து நடித்து இருப்பது படத்துக்கு பெரிய பலம்'' என்றார்.
தமிழ், மலையாளம், இந்தி, ஆகிய 3 மொழிகளில் உருவாகி உள்ளது. இசை: தீபக் வாரியர், ஒளிப்பதிவு: சினு சித்தார்த். தயாரிப்பு: எம்.கே.சுபாகரன், அனுஷ் வர்கீஸ். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.