< Back
முன்னோட்டம்
சைக்கோ திரில்லர் படம்
முன்னோட்டம்

சைக்கோ திரில்லர் படம்

தினத்தந்தி
|
13 Oct 2023 9:37 AM IST
நடிகர்: விகாஸ் நடிகை: யாழினி முருகன்  டைரக்ஷன்: நவீன் மணிகண்டன் இசை: எஸ்.ஆர்.ராம் ஒளிப்பதிவு : நவீன் மணிகண்டன்

சைக்கோ திரில்லர் படமாக `ஆந்தை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

`ஆந்தை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக விகாஸ், நாயகியாக யாழினி முருகன் மற்றும் பயில்வான் ரங்கநாதன், நவுஷத் அனிபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நவீன் மணிகண்டன் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``ஒரு இரவில் நடக்கும் கதையே இந்த படம். சைக்கோ திரில்லர் படமாக உருவாகிறது. சினிமாவுக்கான விறுவிறுப்பு, பரபரப்பு, காதல், சஸ்பென்ஸ், திகில், நகைச்சுவை, கவர்ச்சி, பாடல்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். ஒரே வாரத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது'' என்றார்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார் மில்லத் அகமது. அவர் கூறும்போது, ``நான் எழுதி குறும்படமாக வந்து பல விருதுகள் பெற்ற கதையை `அயோத்தி' என்ற பெயரில் படமாக்கி விட்டனர். நியாயம் கேட்டு சென்றபோது யாரும் பதில் சொல்லவில்லை. போராடி பார்த்து வெறுத்து விட்டேன். `ஆந்தை' படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது'' என்றார். எஸ்.ஆர்.ராம் இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்