சமூக விழிப்புணர்வு கதையில் பிரஜின்...!
|நடிகர் பிரஜின் ‘சமூக விரோதி' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படத்துக்கு 'சமூக விரோதி' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகனாக பிரஜின் நடித்துள்ளார். நாஞ்சில் சம்பத், கே.ராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
படம் பற்றி டைரக்டர் சியோன் ராஜா பேசும்போது, ''உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை உருவாக்குவது யார்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக இந்த படம் உருவாகிறது. சமூக விரோதி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் படத்தை எடுத்துள்ளோம்.
இந்த படத்துக்காக அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நாஞ்சில் சம்பத் ருத்ர தாண்டமே ஆடி விட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கே.ராஜன் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார். நாயகன் பிரஜின் கேரவன் இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொடுத்தார்'' என்றார்.