பிரபுதேவாவின் 60-வது படம்...!
|பிரபுதேவா தற்போது தனது 60-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இதுவரை 59 படங்களில் நடித்துள்ள பிரபுதேவா தற்போது தனது 60-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'வுல்ப்' என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சுகுரியன், ஸ்ரீகோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினோ வெங்கடேஷ் டைரக்டு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகி உள்ளது.
இந்த படத்தில் பிரபுதேவாவுக்காக விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடி உள்ளார். சந்தோஷ் நாகராஜ் தயாரித்துள்ளார். படத்தின் நாயகனும், வில்லனும் ஓநாயின் குணத்தை கொண்டு இருப்பார்கள் என்றும், எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பது கதை என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வசியம் செய்வதை மைய கருவாக வைத்து வரலாற்று காலத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் திகில் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.