< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
நடிகர் சிம்புவின் 'பத்து தல'
|27 March 2023 1:42 PM IST
நடிகர்: சிம்பு,கவுதம் கார்த்திக்,, கவுதம் மேனன் நடிகை: பிரியா பவானி சங்கர் டைரக்ஷன்: கிருஷ்ணா இசை: ஏஆர் ரஹ்மான்
'பத்து தல' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள 'பத்துதல'படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் எனும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மஃப்டி' படத்தின் ரீமேக் என கூறப்பட்டாலும் படத்தின் திரைக்கதையில் பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். அண்மையில் வெளியான படத்தின் 'மறப்போமா' பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவடி' என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சிநேகன் எழுதியுள்ள இந்தப்பாடலை சுபா, நிவாஸ் இணைந்து பாடியுள்ளனர்.