வசந்த பாலன் இயக்கும் புதிய படம்
|`வெயில்' படம் மூலம் தேசிய விருது பெற்ற டைரக்டர் வசந்தபாலன் தற்போது 'அநீதி' என்ற புதிய படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி வசந்தபாலன் கூறும்போது, ''வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்தப் படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். இயக்குனர் ஷங்கர் 'வெயில்' படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள 'அநீதி' படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு முன் வந்தார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பு: எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், வசந்த பாலன். ஒளிப்பதிவு: எட்வின் சகாய்,