< Back
முன்னோட்டம்
நயன்தாராவின் புதிய படம்
முன்னோட்டம்

நயன்தாராவின் புதிய படம்

தினத்தந்தி
|
6 Oct 2023 10:39 AM IST
நடிகை: நயன்தாரா  டைரக்ஷன்: டியூட் விக்கி இசை: ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்

நடிகை நயன்தாரா அடுத்து `மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நயன்தாரா நடித்த `ஜவான்', `இறைவன்' படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்துக்கு `மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 76-வது படம். நயன்தாராவுடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு கதை எழுதி டியூட் விக்கி டைரக்டு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமண் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ் கவனிக்கிறார். படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்