< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
புலனாய்வு படத்தில் நவீன் சந்திரா
|25 Aug 2023 7:53 AM IST
நடிகர்: நவீன் சந்திரா,திலீபன், நடிகை: அபிராமி , ரித்விகா டைரக்ஷன்: லோகேஷ் அஜில்ஸ் இசை: இமான் ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன்
சுந்தர் சியிடம் `கலகலப்பு 2', `வந்தா ராஜாவாதான் வருவேன்', `ஆக்ஷன்' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் டைரக்டு செய்யும் புதிய படம் `லெவன்'. இதில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். இவர் சரபம், சிவப்பு, பிரம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நாயகியாக ரியா ஹரி நடிக்கிறார். அபிராமி, திலீபன், ரித்விகா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ``ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் படமாக தயாராகிறது'' என்றார்.
இந்தப் படத்தை ஏ.ஆர். எண்டர்டைன்மெண்ட் சார்பில் அஜ்மல்கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது. இமான் இசையமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.