புதுமுகங்களின் காதல் கதை
|புதுமுகங்கள் நடிப்பில் `இனி ஒரு காதல் செய்வோம்' என்ற புதிய படம் தயாராகி உள்ளது.
`இனி ஒரு காதல் செய்வோம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் அஜய் பாலகிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகி உள்ளார். மேலும் பல புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, சமுத்திரக்கனி, வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஹரிகரன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``வன்முறையை கொண்டாடாமல், அன்பு மற்றும் காதலை நகைச்சுவை உணர்வோடு உயர்த்திப் பிடிக்கும் படமாக `இனி ஒரு காதல் செய்வோம்' படம் தயாராகி உள்ளது. இதில் சண்டை காட்சிகள் இல்லை. வில்லனும் இல்லை. சூழ்நிலைகள் எவ்வாறு மக்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றன. ஒருவரை பற்றிய மற்றொருவரின் கருத்து எவ்வாறு மாறுகிறது என்பதை சுவாரசியமான முறையில் இப்படம் எடுத்துரைக்கிறது. 1990-களில் பிறந்தவர்களின் நட்பு, காதல், பிரிவு ஆகியவற்றை படம் பேசும்'' என்றார்.
ஒளிப்பதிவு: கோபிநாத் சுகுமார், இசை: ரேவா, எபிக்ஸ் தியேட்டர் தயாரித்துள்ளது.