லாரன்சின் திகில் படம்
|ரஜினிகாந்த் நடித்த `சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பி.வாசு டைரக்டு செய்துள்ளார். இதில் லாரன்ஸ் நாயகனாகவும், கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவிமரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். `சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
பேய், திரில்லர் கதையம்சத்தில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன் தயாரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியில் படம் திரைக்கு வருகிறது.