< Back
முன்னோட்டம்
முன்னோட்டம்
ஜெயம் ரவியின் புதிய படம்
|14 July 2023 12:38 PM IST
நடிகர்: ஜெயம் ரவி நடிகை: கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி டைரக்ஷன்: அர்ஜுனன் ஜேஆர் இசை: ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி
ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அர்ஜுனன் ஜேஆர் டைரக்டு செய்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் 25-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.