< Back
முன்னோட்டம்
தேவா இசையில் பேய் படம்
முன்னோட்டம்

தேவா இசையில் பேய் படம்

தினத்தந்தி
|
7 July 2023 1:09 PM IST
நடிகர்: மனோஜ், நடிகை: சித்து குமரேசன்  டைரக்ஷன்: சிவம் இசை: தேவா ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.வெற்றி

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் புதிய பேய் படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு `பி-2' என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள மனோஜ், `பி-2' படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

`யாத்திசை' படத்தில் நடித்த சித்து குமரேசன் நாயகியாக நடிக்கிறார். இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, அஸ்மிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``பேய், திரில்லர் கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகிறது. நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளோம். தேவா இசையமைத்துள்ளது படத்துக்கு பெரிய பலம்'' என்றார். ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.வெற்றி, தயாரிப்பு: பி.ராமலிங்கம்.

மேலும் செய்திகள்