படமாகும் உண்மை கடத்தல் சம்பவம்
|உண்மையான கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து `கடத்தல்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் நாயகனாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகிறார். நாயகிகளாகவிதிஷா, ரியா ஆகியோர் நடிக்கின்றனர். சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இந்தப் படத்தை சலங்கை துரை டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி, திரில்லர் படமாக உருவாகிறது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு. தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதையே இந்தப் படம். தற்போதைய இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்'' என்றார். ஒளிப்பதிவு: ராஜ் செல்வா, இசை: எம்.ஶ்ரீகாந்த், தயாரிப்பு: செங்கோடன் துரைசாமி.