< Back
முன்னோட்டம்
கிரிக்கெட் கதை
முன்னோட்டம்

கிரிக்கெட் கதை

தினத்தந்தி
|
29 Sept 2023 1:26 PM IST
நடிகர்: ஶ்ரீனி சவுந்தரராஜன் நடிகை: நிமிஷா  டைரக்ஷன்: ஶ்ரீனி சவுந்தரராஜன் இசை: ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் ஒளிப்பதிவு : ஷியாம் ராஜ்

`கபில் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தை தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ஶ்ரீனி சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்து, டைரக்டும் செய்துள்ளார். நிமிஷா, ரியாஸ்கான், சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், ஜான், பேபி வர்ஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் பவுலரை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி உள்ளது. படம் பற்றி ஶ்ரீனி சவுந்தரராஜன் கூறும்போது, ``மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையின் மூலதனமே முயற்சி செய்வது தான். அது போலதான் இப்படத்திற்கு முயற்சி எடுத்திருக்கிறேன்'' என்றார்.

படம் பற்றி இயக்குனர் பேரரசு கூறும்போது, ``மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்றாற்போல் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனி சவுந்தரராஜன். நான் படம் பார்க்கச் சென்றால் என் மகளோடு தான் செல்வேன். பெண் குழந்தைகளும் பார்க்கும் படமாக இப்படம் உள்ளது. இது இளைஞர்களும், பெற்றோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம்'' என்றார். ஒளிப்பதிவு: ஷியாம் ராஜ், இசை:ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்.

மேலும் செய்திகள்