5 மொழிகளில் வரும் குழந்தைகள் படம்
|குழந்தைகள் கதையம்சத்தில் `லில்லி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவகிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ்வீர், மிட்சிலி ஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி சிவம் டைரக்டு செய்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ``இது முழுக்க குழந்தைகளுக்கான படம். நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கண் கலங்க வைக்கும்.
இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல, பெரியவர்களுக்குமான படம். முதல் முறையாக இந்தப் படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும்''என்றார். கே. பாபு ரெட்டி, ஜி. சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள `லில்லி' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இசை - ஆண்டோ பிரான்சிஸ், ஒளிப்பதிவு: ராஜ்குமார்.