< Back
முன்னோட்டம்
திரில்லர் கதையில் சார்லி
முன்னோட்டம்

திரில்லர் கதையில் சார்லி

தினத்தந்தி
|
21 July 2023 12:43 PM IST
நடிகர்: சார்லி,சென்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா  டைரக்ஷன்: வினோத் ராஜேந்திரன் இசை: சூர்ய பிரசாத் ஒளிப்பதிவு : பிரசாந்த் வெள்ளிங்கிரி.

`பைண்டர்' என்ற பெயரில் தயாராகும் திரில்லர் படத்தில் சார்லி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா ஆகியோரும் நடிக்கின்றனர். அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை நிரபராதிகள் என்று நிரூபித்து அரசின் இழப்பீட்டு தொகையை வாங்கி கொடுக்கும் நிறுவனத்தை பற்றிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். ரஜீப் சுப்பிரமணியம் வினோத் ராஜேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை: சூர்ய பிரசாத், ஒளிப்பதிவு: பிரசாந்த் வெள்ளிங்கிரி.

மேலும் செய்திகள்