< Back
முன்னோட்டம்
மனதை கொள்ளையடிக்கும் கதையில், அசோக் செல்வன்
முன்னோட்டம்

மனதை கொள்ளையடிக்கும் கதையில், அசோக் செல்வன்

தினத்தந்தி
|
16 Sept 2022 8:01 AM IST
நடிகர்: அசோக் செல்வன் நடிகை: ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர்  டைரக்ஷன்: ரா.கார்த்திக் இசை: கோபி சுந்தர் ஒளிப்பதிவு : விது அய்யனா

மனதை கொள்ளையடிக்கும் அழகான திரைக்கதையில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.

"வாழ்க்கை என்பதே பயணம்தான். தினமும் நம் மேலே இருக்கும் வானம், கலைந்து போகும் மேகம் போல வாழ்வின் பயணம் நம்முள் ஏற்படுத்தும் தாக்கங்களை, மனதை கொள்ளையடிக்கும் அழகான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம். அதுவே 'நித்தம் ஒரு வானம்' படமாக வந்திருக்கிறது" என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் ரா.கார்த்திக். இவர் மேலும் கூறியதாவது:-

"மூன்று காலகட்டங்களில் நிகழும் கதை இது. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். 3 கதாநாயகிகள் இருந்தாலும், இது காதல் படம் அல்ல. அன்பையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் ஒரு அழகான கவிதை போல் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஐதராபாத், மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது. ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்."

மேலும் செய்திகள்