ஆக்ஷன் கதையில் ஆர்யா, வெங்கடேஷ்
|பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள `சைந்தவ்' என்ற படத்தில் ஆர்யா, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக `சைந்தவ்' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் ஆர்யா, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்துள்ளார். நவாசுதீன் சித்திக், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா, சரா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள் சைலேஷ் கொலானு டைரக்டு செய்துள்ளார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இது வெங்கடேஷின் 75-வது படமாகும்.
வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ளார். இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு:- எஸ்.மணிகண்டன். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருந்தது. அப்போது `சலார்' படம் வர இருப்பதால், இந்தப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.