< Back
முன்னோட்டம்
ஒரு இரவில் நடக்கும் திகில் கதை
முன்னோட்டம்

ஒரு இரவில் நடக்கும் திகில் கதை

தினத்தந்தி
|
13 Oct 2023 11:08 AM IST
நடிகர்: விஜய் விஷ்வா நடிகை: ராஷ்மிதா  டைரக்ஷன்: சந்தோஷ் சேகரன் இசை: ஆதீஷ் உத்ரியன் ஒளிப்பதிவு : ஆர்.பி.செல்வகுமார் வர்மா

ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதையாக `சாதுவன்' என்ற புதிய படம் உருவாகிறது.

விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள படம் `சாதுவன்'. இதில் நாயகியாக ராஷ்மிதா மற்றும் கலையரசன், காசி, சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சந்தோஷ் சேகரன் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``வாழ்க்கையை வெறுத்து சாவைத் தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றிய படம். ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதையில் உருவாகிறது. விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் படம் இருக்கும்'' என்றார்.

ஒளிப்பதிவு: ஆர்.பி.செல்வகுமார் வர்மா, பின்னணி இசை: ஆதீஷ் உத்ரியன். இந்தப் படத்துக்கு பாடல் எழுதி இசையமைத்து சதா முருகன் தயாரித்துள்ளார். புதுச்சேரி, கடலூர், ஈரோடு, ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்