< Back
முன்னோட்டம்
பழிவாங்கும் பேய் கதை
முன்னோட்டம்

பழிவாங்கும் பேய் கதை

தினத்தந்தி
|
28 July 2023 1:30 PM IST
நடிகர்: சகோ. ரமேஷ் நடிகை: தீப்தி திவான்  டைரக்ஷன்: ஏ.பி.ஆர் இசை: ஏ.கே.ராம்ஜி. ஒளிப்பதிவு : பிரித்வி ராஜேந்திரன்

கொடைக்கானலில் சில இளைஞர்கள் போதைப் பொருள் உட்கொண்டு இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஆவியாக வந்து தன்னை யார் யார் கற்பழித்து சித்திரவதை செய்தனர், யார் யாரால் மோசம் போனோம்? என்பதை கண்டறிந்து அத்தனை பேரையும் பழி வாங்கும் கதையம்சத்தில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு `கல்லறை' என்ற பெயர் வைத்துள்ளனர்.

இதில் சகோ. ரமேஷ் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார். தீப்தி திவான் நாயகியாக நடிக்கிறார். ரதி ஜவஹர் ஞானராஜ், யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன் சுரேஷ், ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.பி.ஆர் டைரக்டு செய்துள்ளார். குட் நியூஸ் பிலிம்ஸ் சார்பில் ரதி ஜவஹர் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: பிரித்வி ராஜேந்திரன், இசை: ஏ.கே.ராம்ஜி.

மேலும் செய்திகள்