< Back
முன்னோட்டம்
பழிவாங்கும் பேய் கதை
முன்னோட்டம்

பழிவாங்கும் பேய் கதை

தினத்தந்தி
|
21 July 2023 12:24 PM IST
நடிகர்: சிட்டிசன் மணி நடிகை: ரோகிணி  டைரக்ஷன்: சிட்டிசன் மணி இசை: தஷி ஒளிப்பதிவு : ரஹீம் மற்றும் சீனு

வடிவேல், விவேக் ஆகியோருடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சிட்டிசன் மணி. இவர் ஏற்கனவே `பெருநாளி' என்ற படத்தை டைரக்டும் செய்துள்ளார். தற்போது இரண்டாவது படமாக மாடத்தி பிலிம்ஸ் சார்பில் 'அசுர மனிதன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இதில் நாயகியாக ரோகிணிரோகிணி அறிமுகம் ஆகிறார். பிரதீப் சேட்டா, தேவி பிரியா மற்றும் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

படம் பற்றி சிட்டிசன் மணி கூறும்போது, ``பகையான பக்கத்து கிராமத்து பையனை காதலிக்கும் தங்கையை அண்ணன் ஆள் வைத்து உயிருடன் தீவைத்து எரிக்கிறான். அவள் ஆவியாகி தன்னை எரித்தவர்களை பழிவாங்குகிறாள். உயிருடன் இருக்கும் காதலனை அடையவும் அந்த ஆவி முயற்சிக்கிறது. இதற்கு `அசுர மனிதன்' துணை நிற்கிறான் என்ற கதையம்சத்தில் அதிரடி திரில்லர் பேய் படமாக உருவாகிறது'' என்றார்.

இந்த படத்துக்கு தஷி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: ரஹீம் மற்றும் சீனு. ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுபது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்