< Back
முன்னோட்டம்
உறவுகளின் பாசத்தை சொல்லும் குடும்ப கதை
முன்னோட்டம்

உறவுகளின் பாசத்தை சொல்லும் குடும்ப கதை

தினத்தந்தி
|
20 Oct 2023 8:17 AM IST
நடிகர்: சுரேஷ் நந்தா  டைரக்ஷன்: நாகையா கருப்பையா இசை: தீபன் சக்கவர்த்தி ஒளிப்பதிவு : எம்.சீனிவாசன்

ரத்த சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் கிராமத்து பின்னணியில் சொல்லும் கதையம்சத்தில் `வீராயி மக்கள்' என்ற படம் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தை சுரேஷ் நந்தா தயாரித்து கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். வேல ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் அண்னன்-தம்பிகளாக நடித்துள்ளனர். தீபா சங்கர், மெட்ராஸ் ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டியக்கா, நந்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை நாகையா கருப்பையா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே `அழகென்ற சொல்லுக்கு அமுதா' என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி அவர் கூறும்போது, ``அண்ணன், தம்பி, சித்தப்பா, மாமா, அப்பத்தா என்று உறவு முறைகளோடு வாழ்ந்த குடும்பம், ஒரு பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து 25 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க நாயகன் முயல்வதும், அது நடந்ததா? என்பதும் கதை. படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது'' என்றார்.

இசை: தீபன் சக்கவர்த்தி, ஒளிப்பதிவு: எம்.சீனிவாசன்.

மேலும் செய்திகள்