அண்ணன்-தங்கை பாசக் கதை
|இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து `கும்பாரி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா ஆகியோரும் நாயகியாக மஹானா சஞ்சீவியும் நடித்துள்ளனர். ஜான் விஜய், சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தில், காதல் சுகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்தப் படத்தை கெவின் ஜோசப் டைரக்டு செய்துள்ளார். டி.குமாரதாஸ் தயாரித்துள்ளார்.
பட நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் பேசும்போது, ``கும்பாரி என்பதன் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. அதன்பிறகுதான் அதற்கு `நட்பு' என அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்தோடு தொடர்பு கொண்டது. நட்பு மட்டும்தான் எந்தவித பந்தமும் இல்லாமல் வரக்கூடியது'' என்றார்.
நாயகன் விஜய் விஷ்வா கூறும்போது, ``படத்தின் கதை கடலும் கடல் சார்ந்தும் உருவாகி யுள்ளது. 25 நாட்களில் படப்பிடிப்பை வேகமாகவே முடித்து விட்டோம்'' என்றார். இசை: ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி. ஒளிப்பதிவு: பிரசாத் ஆறுமுகம்.