< Back
சினிமா துளிகள்

சினிமா துளிகள்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு

4 Oct 2022 1:30 PM IST
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள யோகிபாபு, முதல் முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி, படத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களின் கதாநாயகனாக யோகி பாபு நடித்து வந்தார். இந்த நிலையில், தற்போது, தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனமும் எழுதி அவர் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ் ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, ஆகியோரும் நடிக்க உள்ளனர்.