< Back
சினிமா துளிகள்
சொந்த கிராமத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற யோகி பாபு
சினிமா துளிகள்

சொந்த கிராமத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற யோகி பாபு

தினத்தந்தி
|
9 Jun 2022 6:18 PM IST

நடிகர் யோகி பாபு தன் சொந்த கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை,

திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குபவர் யோகி பாபு. இவர், தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயம் மற்றும் காலபைரவர் ஆலயத்தை நிறுவினார்.

இதையடுத்து இன்று கோவிலில் சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு நடிகர் யோகிபாபு, தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்