< Back
சினிமா துளிகள்
டாக்சி டிரைவராக யோகி பாபு
சினிமா துளிகள்

டாக்சி டிரைவராக யோகி பாபு

தினத்தந்தி
|
15 July 2022 3:47 PM IST

'மெடிக்கல் மிராக்கல்' படத்தில் யோகி பாபு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.

யோகி பாபு கதாநாயகனாக டாக்சி டிரைவர் வேடத்தில் நடிக்கும் படம், 'மெடிக்கல் மிராக்கல்.' இது, முழுக்க முழுக்க அரசியல் நகைச்சுவை படம். யோகி பாபுவுக்கு ஜோடியாக தர்சா குப்தா நடிக்கிறார்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், மதுரை முத்து, நாஞ்சில் சம்பத், சித்தார்த் விபின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜான்சன் கே. தயாரித்து இயக்குகிறார்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்