மாளவிகா மோகனன் முகத்துக்கு என்ன ஆச்சு?
|மாளவிகா மோகனன் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்று ரசிகர்கள் பல்வேறு விதமாக யோசிக்க தொடங்கி விட்டார்கள்.
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்திலும், தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்தார். ஆனாலும் தமிழில் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இந்தியில் பெயரிடப்படாத ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.
சமீபத்தில் விமான நிலையத்துக்கு வந்த மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து போனார்கள். வழக்கத்துக்கு மாறாக அவரது முகம் வித்தியாசமாக காணப்பட்டது. ஒருவேளை அவர் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்று ரசிகர்கள் பல்வேறு விதமாக யோசிக்க தொடங்கி விட்டார்கள். அவரது முகத்துக்கு என்ன ஆச்சு? என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் இதற்கு என்ன காரணம்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.