< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஆக்ரோஷத்துடன் விஷால்.. வைரலாகும் போஸ்டர்
|3 Dec 2023 10:21 PM IST
நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷத்துடன் விஷால் நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரத்னம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.