< Back
சினிமா துளிகள்
புதிய சாதனை படைத்த விக்ரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா துளிகள்

புதிய சாதனை படைத்த விக்ரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

தினத்தந்தி
|
26 Jun 2022 8:18 AM IST

விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். விக்ரம் திரைப்படம் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியானது.

தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் இதுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் அடுத்தடுத்து பல புதுப்படங்கள் வெளி வந்தாலும் விக்ரம் மீதான ரசிகர்களின் ஆர்வம் இன்றும் குறையவில்லை. இதையடுத்து விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

மேலும், விக்ரம் படத்தின் மொத்த வசூல் நாளைக்குள் உலக அளவில் ரூ400 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக எந்த ஒரு தமிழ்படமும் இந்த வசூலை எட்டவில்லை. இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி கமல் மட்டும் அல்லாது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்