< Back
சினிமா துளிகள்
வெளியானது விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்
சினிமா துளிகள்

வெளியானது விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்

தினத்தந்தி
|
8 Aug 2022 11:16 PM IST

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. பெப்பியாக உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்