< Back
சினிமா துளிகள்
ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் வெற்றிமாறன்
சினிமா துளிகள்

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் வெற்றிமாறன்

தினத்தந்தி
|
17 Feb 2023 11:19 AM IST

வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்து 'வடசென்னை-2' படத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் புதிய படம் இயக்க பேசி வருகிறாராம். `ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆரை நேரில் பாராட்டிய வெற்றிமாறன் ஒரு புதிய கதையை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக ஜூனியர் என்.டி.ஆரும், பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்.

மேலும் செய்திகள்