உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்
|இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இப்படத்தின் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளார். அதாவது, உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து உள்ள உத்திரமேரூர் என்ற பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருப்பதாகவும் இந்த நிலத்தை எந்த காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்றும் வீடு கட்டி அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பைக், கார் போன்ற ஆடம்பர பரிசுகள் கொடுக்கும் திரையுலகினர் மத்தியில் வெற்றிமாறன் வித்தியாசமாக நிலம் வாங்கி கொடுத்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.