< Back
சினிமா துளிகள்
பயத்தை முறியடித்த வரலட்சுமி சரத்குமார்.. ட்ரெண்டாகும் வீடியோ
சினிமா துளிகள்

பயத்தை முறியடித்த வரலட்சுமி சரத்குமார்.. ட்ரெண்டாகும் வீடியோ

தினத்தந்தி
|
6 Jun 2023 11:31 PM IST

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது பயத்தை முறியத்து பைக் ஓட்டி கற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் குழந்தையாக மற்றும் பதின் வயதில் இருக்கும் போது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கு மனதளவில் தடை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த பயத்தைப் போக்க இது நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.

அதனால், கடந்த வாரம் பைக் ஓட்டுவதன் முதல் படிநிலையான சைக்கிள், ஸ்கூட்டி, புல்லட் போன்ற வாகனங்களில் இருந்து தொடங்கினேன். கொஞ்சம் வருத்தப்பட்டேன் ஆனால், இது அனைத்தும் உங்கள் பயத்தை போக்குவதற்காக செய்வது. நாம் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி எழுந்தோம் என்பதே முக்கியம் " என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் செய்திகள்