வைகை இவ்வளவு நாளாக வறண்டு போய் இருந்தது - நடிகர் வடிவேலு
|தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தற்போது இவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
தற்போது வடிவேலுவின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வைகை புயல் அவர்களே இப்போது தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் சுருக்கமாக சொல்லவும் என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கு வடிவேலு, " நான் வைகை புயல் பேசுகிறேன். வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருந்தது. இப்போது வைகை திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள் நன்றி" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.