< Back
சினிமா துளிகள்
நல்ல ரைடர் ஆகுவதற்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.. அஜித்தை பின்பற்றும் மஞ்சு வாரியர்..
சினிமா துளிகள்

நல்ல ரைடர் ஆகுவதற்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.. அஜித்தை பின்பற்றும் மஞ்சு வாரியர்..

தினத்தந்தி
|
19 Feb 2023 11:11 PM IST

நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே நடிகை மஞ்சு வாரியர், அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் புதிதாக பைக் ஒன்று வாங்கியுள்ளார். இவர் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "தைரியத்திற்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. ஒரு நல்ல ரைடர் ஆகுவதற்கு முன்பு நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்