< Back
சினிமா துளிகள்
விக்ரம் வெற்றிக்கு இது தான் காரணம்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

கோப்புப்படம் 

சினிமா துளிகள்

விக்ரம் வெற்றிக்கு இது தான் காரணம்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
19 Jun 2022 1:29 AM GMT

விக்ரம் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் , முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னையில் நேற்று (18-06-2022) விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில், "விக்ரம் பட வெற்றிக்காக கார் பரிசளித்தது, வாட்ச் கொடுத்தது, பைக் கொடுத்தது குறித்தெல்லாம் சொல்கின்றனர்.

அதையெல்லாம் விட பெரியது உழைக்கும் மக்கள் தங்களது கூலியிலிருந்து ஒரு தொகையைக் கொடுத்ததே உண்மையான பரிசு. எங்கள் படத்தை திருவிழா மாதிரி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் இல்லை என்றால் இது நடந்திருக்காது. கலை உலகத்தில் மொழி வித்தியாசம் கிடையாது. கடந்த பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுமட்டுமே. அதற்கு காரணம் மகேந்திரனும், உதயநிதி ஸ்டாலினும் தான்." என கூறினார்.

மேலும் செய்திகள்